9-வது மாடியில் இருந்து தற்கொலைக்காக குதித்த நபருக்கு நேர்ந்த நிலை! வைரலாகும் பரிதாப காட்சி: Warning Video
அமெரிக்காவில் தற்கொலை செய்து கொள்ள 100 அடி கட்டிட உயரத்தில் இருந்து குதித்த நபர் இரத்த களறியுடன் துடி துடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் New Jersey-யில் உள்ள Jersey நகரில், கடந்த புதன் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 10.20 மணியளவில், அங்கிருக்கும் அடுக்கு மாடி கட்டிடத்தின் 9-வது மாடியில் இருந்து, அதாவது சுமார் 100 அடி உயரத்தில் இருந்து தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்துள்ளார்.
அப்போது, அவர் கீழே இருந்த BMW கார் மேற்கூரையின் மீது விழுந்துள்ளார். இதனால் காரின் கண்ணாடித் துண்டுகள் உடைந்து நொறுங்க, அவர் அந்த காரின் உள்ளே இருந்து இரத்தக் காயங்களுடன் வெளியில் வந்து, வலியால் துடி துடிக்கிறார். இதை அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்தின் புகைப்படக்காரர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
அதில், மேல் இருந்து கீழே விழுந்த அவருக்கு கை உடைந்துவிட்டதால், அவர் வலியால் துடிப்பதை காட்டுகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த Christina Smith என்ற 21 வயது நபர் கூறுகையில், ஒரு மிகப் பெரிய சத்தம் கேட்டது.
அதன் பின் திரும்பி பார்த்த போது, காரின் பின்பக்க ஜன்னல் வெடித்து கிடந்தது. முதலில் நான் இது ஒரு நபர் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு மிகப் பெரிய பறவையாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
உடனே பார்த்த போது, அவர் காயத்தால் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவசர உதவியை தொடர்பு கொண்டேன். அந்த நபரின் கை உடைந்துவிட்டது. நான் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தேன். இது ஒரு திரைப்படத்தில் இருப்பது போல் இருந்தது.
நான் அந்த நேரத்தில் மெக்டோனால்டுக்கு செல்லும் போது, இதை பார்த்தேன். உடனடியாக பொலிஸ், அவசர உதவிக்கு அழைத்தேன் என்று கூறியுள்ளார். அவர் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பொலிசார் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்து அந்த நபரை ஏற்ற முயன்ற போது, என்னை விட்டுவிடுங்க, நான் இறக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், ஏன் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார் என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை. மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே இது குறித்த முழு விபரம் தெரியவரும்