நடுவானில் விமானத்தில் தீப்பிடித்த சூட்கேஸ்: சுவிட்சர்லாந்தில் பீதியை ஏற்படுத்திய சம்பவம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த சூட்கேஸ் ஒன்று திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
திடீரென கேட்ட சத்தம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சூட்கேஸ் ஒன்றிலிருந்து புகையும் நெருப்பும் வெளிவரத் துவங்கியுள்ளன. உடனடியாக சிலர் அந்த சூட்கேஸ் மீது தண்ணீரை ஊற்றியும் தீ அணையாமல் பரவத் துவங்கவே, விமானத்திலிருந்தவர்கள் பீதியடைந்துள்ளனர்.
தீப்பிடிக்கக் காரணமான பொருள்
விடயம் என்னவென்றால், அந்த சூட்கேசுக்குள் ஒரு இ - சிகரெட் இருந்துள்ளது. திடீரென அது வெடித்ததே சூட்கேஸ் தீப்பிடிக்கக் காரணமாக அமைந்துள்ளது.
உடனடியாக விமானம் ஜெனீவாவுக்குத் திரும்ப, அங்கே தயாராக காத்திருந்த தீயணைக்கும் வீரர்கள் தங்கள் கடமையைச் செய்துள்ளார்கள்.
பீதியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.