Post office: மொத்தம் ரூ.50 லட்சம் கிடைக்கும்.., எத்தனை வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும்?
பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
அதன்படி, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டம் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகும்.
இது சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணத்தை சேமிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
தொடர்ந்து ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.71 லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பெற முடியும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கிறது.
இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,05,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், சுமார் ரூ.50 லட்சம் கிடைக்கும்.
8.2% வட்டி தொடர்ந்து கிடைத்தால், 21 ஆண்டுகளின் முடிவில் சுமார் ரூ.50.27 லட்சம் கிடைக்கும்.
இந்தக் கணக்கீட்டின்படி, ஆண்டுக்கு முதலீடு ரூ.1,05,000 எனில் 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.15.75 லட்சம் ஆகும்.

எனவே மொத்த வட்டி சுமார் ரூ.34.52 லட்சம் கிடைக்கும். அதேபோல் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50.27 லட்சம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.
கணக்கு தொடங்கிய 21 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம். மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விதிக்கப்படாது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |