செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.., ரூ. 33 முதலீடு செய்தால் ரூ. 5 லட்சம் கிடைக்கும்
sukanya samriddhi yojana scheme- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
அதன்படி, ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பெரிய கனவு.
இதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய முக்கியமான திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.
2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த கணக்கைத் தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் பெற்றோர் தங்கள் மகளின் பெயரில் கணக்கைத் திறந்து சிறு தொகையாக பணம் சேமிக்கலாம்.
21 ஆண்டுகள் முடிவில் பெரிய தொகையாக பணம் கிடைக்கும். வங்கி நிலையான வைப்பை விட இந்த திட்டத்தில் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரு நாளைக்கு ரூ.33 வீதம், மாதம் ரூ.1,000 சேமித்தால் ஆண்டுக்கு ரூ.12,000 ஆகும். 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.1.80 லட்சம் ஆகும். வட்டி சேர்த்து 21 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.5.54 லட்சம் வரை கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் வட்டி தொடர்ந்து சேரும்.
ஆனால் கணக்கு முழுமையாக முதிர்வு அடைவது மகளுக்கு 21 வயது ஆனபோது தான். மகளுக்கு 18 வயது ஆன பிறகு சேமித்த தொகையில் 50% வரை பெற்றோர் எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல், ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு மகள்களின் பெயரில் இந்த கணக்கைத் தொடங்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |