போஸ்ட் ஆபிஸ் திட்டம்.., மாதம் ரூ.3,000 சேமித்தால் வட்டி மட்டும் ரூ.11 லட்சம் கிடைக்கும்?
Sukanya samriddhi yojana scheme details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
அந்தவகையில், பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
மொத்தம் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். ஆனால், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகே கணக்கு முதிர்வடையும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், கணக்கில் விதிகளின்படி வட்டி தொடர்ந்து சேரும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் EEE வகையைச் சேர்ந்த சேமிப்புத் திட்டமாகும்.

இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ், விதிகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை கிடைக்கும்.
மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உள்ளது.
இத்திட்டத்தில், மாதம் ரூ.3,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தம் ரூ.5.40 லட்சம் முதலீடு செய்யப்படும்.
இந்த தொகை 21 ஆண்டுகளில் சுமார் ரூ.17.23 லட்சமாக மாறும். மேலும், இதில் சுமார் ரூ.11.83 லட்சம் வட்டியாக கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |