பொற்கோயிலில் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு: அமிர்தசரஸில் பதற்றம்
பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோயிலில் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொற்கோவிலில் துப்பாக்கிச் சூடு
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இன்று அதிகாலை சிரோமணி அகாலி தள் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கிய மதத்தின் உயர்நிலை அமைப்பான அகால் தத் விதித்த தண்டனையின் ஒரு பகுதியாக, பொற்கோவிலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த சுக்பீர் சிங் பாதல், தனது ஆதரவாளர்களுடன் சேர்த்து, பொற்கோவில் வாயிலில் அமர்ந்திருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
#WATCH | Punjab: Bullets fired at Golden Temple premises in Amritsar where SAD leaders, including party chief Sukhbir Singh Badal, are offering 'seva' under the religious punishments pronounced for them by Sri Akal Takht Sahib, on 2nd December.
— ANI (@ANI) December 4, 2024
Details awaited. pic.twitter.com/CFQaoiqLkx
இராணுவ சட்டத்தை அறிவித்து பின் நீக்கிய ஜனாதிபதி! கூட்டாக பதவி விலக முன்வந்த பிரமுகர்கள்..பதற்றத்தில் தென்கொரியா
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுக்பீர் சிங் பாதலின் ஆதரவாளர்கள் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் பொற்கோவில் வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |