சுக்கிரனின் இடமாற்றம்! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பிரச்சனை அதிகரிக்கப் போகுதாம்
2022 ஜூன் 18 ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் ஜூலை 13 ஆம் திகதி வரை இருப்பார்.
இந்த காலத்தில் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.
மிதுனம்
சுக்கிர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை தவிர்க்கவும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் விரும்பிய முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். இக்காலத்தில் குடும்பத்துடனான ஒற்றுமை மோசமடையக்கூடும். நோய் ஏதேனும் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்ய விரும்பினால், இக்காலத்தில் மிகவும் கவனமாக செய்யுங்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
வேலை செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வேலையை மாற்ற விரும்பினால், அதில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். இக்காலத்தில் அவர்களுக்கு நீங்கள் நிதி உதவி செய்வீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி கலவையானதாக இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவிடுவீர்கள். அதே வேளையில் வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் சவாலானதாக இருக்கும். கடினமாக உழைத்தால் வெற்றி பெறுவீர்கள்.
பெண்கள் தங்கள் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் இமேஜ் பாழாகலாம். சிலருக்கு ஆரோக்கியம் தொடர்பான, அதுவும் கை மற்றும் தோள்பட்டையில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்
- சுக்கிர தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.
- வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வழிபடுவதனால் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் பொருள் செல்வம் கிடைக்கும்.
- சுக்கிர தோஷம் நீங்குவதற்கு வைரம் அணியலாம். ஏழு முக ருத்ராட்சம் அணிவதால் சுக்கிரனால் ஏற்படும் தடைகளும் நீங்கும்.
- சுக்கிர தோஷத்திற்கான மற்றொரு பரிகாரம் லட்சுமி தேவியை வழிபட்டு லட்சுமி துதி அல்லது துர்கா சாலிசாவை சொல்ல வேண்டும்.