இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவுள்ள முக்கிய பெயர்ச்சி! விபரீத ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Astrology Spiritual
By Kishanthini Sep 03, 2021 12:50 AM GMT
Report

செப்டம்பர் 5ஆம் தேதி முதல் சுக்கிரன் தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த சுக்கிர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும், சிலருக்கு மாளவியா யோகத்தையும் தரப்போகிறார். 

இந்த சுக்கிர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்கு சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு களத்திர ஸ்தான அதிபதி காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

ஏழாம் வீட்டில் அமரும் சுக்கிரனால் உங்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கப் போகிறது. சுக்கிரன் நேரடி பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. புதிய காதல் ஏற்படும். இதுநாள்வரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி வெற்றிகரமாக முடிவடையும்.

தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். செவ்வாய் 6ஆம் வீட்டிற்கு வருவதால் சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். வெள்ளிக்கிழமையன்று விளக்கேற்றி வணங்க பாதிப்புகள் குறையும்.

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் வரும். திடீர் பண வரவு வரும். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.

இனிமையான பேச்சுக்களால் மனைவியை குளுமைப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. அம்மன் கோவிலுக்கு பச்சரிசி தானமாகக் கொடுக்கவும்.

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் காசு மேல காசு வந்து கொட்டும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுப காரியத் தடைகள் ஏற்படுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

பெற்றவர்களின் மனதில் இருந்த கவலை நீங்கும். காரியங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெற்றிகரமான கால கட்டம் இது. குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளாதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும்.

பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போவதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும்.

ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.

சிம்மம்

தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த சுக்கிரன் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அவ்வப்போது கவனம் தேவை.

உடல் நலனில் சின்னச் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும்.

உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் ஏற்படும்.

தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். நெருப்பு, இயந்திரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வேலை விசயமாக சிறு பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி

உங்கள் ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் குழந்தைகள் பிறக்கும்.

பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க மேலும் பல நன்மைகள் நடக்கும்.

துலாம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போவதால் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும்.

சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும்.

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

விபரீத ராஜயோகம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான டிவி பிாிட்ஜ் ஏசி போன்ற பொருட்கள் வாங்கலாம். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.

கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் தாயார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11வது வீட்டில் பயணம் செய்கிறார். ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரப் போகும் சுக்கிரனால் வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும்

. பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாக செயல்படுவீர்கள்.

மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். குடும்பம் குதூகலமாக இருக்கும்.  

மகரம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். மாளவியா யோகம் தேடி வரப்போகிறது.

பத்துக்கு அதிபதி பத்தில் ஆட்சி பெற்று அமர்வது மாளவியா யோகம் தரும் அமைப்பு என்பதால் நன்மைகளும் சந்தோஷங்களும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும்.

புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். பத்தில் சுக்கிரன் பதவியில் உயர்வு தருவார். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சுக்கிரன் உங்க சுக ஸ்தான அதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதல் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும்.

காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம்.

பணவரவும் அதிகரிக்கும். ஆலய தரிசனம் செல்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சியும் நெருக்கமும் அதிகரிக்கும்.

மீனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவது விபரீத ராஜயோக அமைப்பாகும். உங்க ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன் உங்க ராசி லக்ன அதிபதிக்கு எதிரி. பகையாளி எட்டிற்கு உரியவன் எட்டில் மறையப்போவது ராஜயோகம்தான். இருந்தாலும் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை.

விலை உயர்ந்த பொருட்களையும் பணத்தையும் பத்திரப்படுத்தவும். திடீர் பண வரவு வரும் கூடவே மருத்துவ செலவுகள் எற்படும். அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US