லண்டனுக்கு தப்பி சென்று தஞ்சமடைந்த ஆசிய பிரபலம்! பல கோடி பணம் ஏப்பம்... சொந்த நாடு திரும்பினார்
லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
சுலைமான் ஷெஹ்பாஸ்
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் பிரித்தானிய தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை மந்தமாகின.
இந்த சூழலில் ஊழல் வழக்கில் சுலைமான் ஷெஹ்பாசை கைது செய்வதற்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. அதே சமயம் இந்த வழக்கில் ஜாமீன் பெற 13-ந் திகதிக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
abplive
நாடு திரும்பினார்
இந்த நிலையில் லண்டனுக்கு தப்பியோடிய 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நேற்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், எனவே தனது பாதுகாப்பிற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
2019 ஆம் ஆண்டில், பணமோசடி வழக்கில் சுலைமான் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சர்ச்சையில் சிக்கினார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.
கைது வாரண்ட்
ரூ. 3.3 பில்லியன்கள் மதிப்பிலான சொத்துக்களை சுலைமான், அவர் தந்தை மற்றும் குடும்பத்தார் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் கூறியது.
இதையடுத்து அக்டோபர் 2019 இல், பொறுப்புக்கூறல் நீதிமன்றம், ஷெரீப் குடும்பத்தினருக்கு எதிரான பணமோசடி வழக்கில் சுலைமானை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்தது.
இதையடுத்தே அவர் லண்டனுக்கு தப்பியது குறிப்பிடத்தக்கது.