பிரித்தானியாவை நடுங்கவைத்த வாள்வெட்டு... இரு சிறார்களின் உயிரைப் பறித்த கோடைகால முகாம்
பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடத்தப்பட்ட கோடைகால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் தற்போது இரு சிறார்கள் கொல்லப்பட்டுள்லதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்கள் ஆபத்தான நிலையில்
குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் தப்பிய 6 சிறார்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூன்று இளைஞர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் ஒரு திகில் பட பாணியில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை பொலிசார் சம்பவயிடத்திலேயே சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
சிறார்களை காப்பாற்ற முயன்ற இருவரும் காயங்களுடன் தப்பிய நிலையில், தற்போது ஆபத்தாக கட்டத்தில் உள்ளதாக கூறுகின்றனர். சவுத்போர்ட் பகுதியில் Merseyside அருகே சிறார்களுக்காக கோடைகால முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் டசின் கணக்கான சிறார்கள் கலந்துகொண்டுள்ளனர். Taylor Swift பாணி யோகா மற்றும் நடன வகுப்புகள் என்பதால் சிறார்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ளனர். பகல் 11.50 மணியளவில் திடீரென்று முகாம் வளாகத்தில் நுழைந்த அந்த நபர், சிறார்கள் மீது சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளான்.
தாக்குதல்தாரியை தடுக்க
இதில் 9 சிறார்கள் காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், 6 பேர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். சிறார்களை பாதுகாக்கும் பொருட்டு தாக்குதல்தாரியை தடுக்க முயன்ற இருவரும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கைதான சிறுவனிடம் பொலிசார் விசாரணை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது 25 சிறார்கள் அந்த முகாமில் இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
முகத்தில் மாஸ்க் அணிந்து, டாக்ஸி சாரதிக்கு பணம் தர மறுத்து, தப்பியோடிய நபராக இருக்கலாம் தாக்குதலில் ஈடுபட்டவர் என்றும் அப்பகுதியில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |