மக்களுக்கு விடுக்கப்பட்ட கோடை வெயில் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் அதிகரிக்கும் என இந்த வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகின்றது.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 1 டிகிரியாவது வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் அதிகரிக்கும் என இந்த வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவிக்கையில், "நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. குறிப்பாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகளில் சராசரி அளவை விட வெப்பம் அதிகரிக்கும்.
சமவெளிப் பகுதிகளில் அதிக அனல்காற்று வீசும். இதன் காரணமாக குஜராத், மத்திய மஹாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்" என அவர் கூறியுள்ளார்.
மேலும் புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், தேர்தல் நேரத்தில், வெப்பம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வந்துள்ளது. எனவே இதற்கான முன்னாயத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
வயதானவர்களையும், குழந்தைகளையும் தனியே வெளியில் அனுப்ப வேண்டும் எனவும் தண்ணீர் அருந்திக்கொண்டே இருக்கவும் என வானிலை மையம் பொது மக்களுக்கு எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |