பள்ளிகளில் கோடை விடுமுறையை மாற்ற திட்டம்- வெளியான அறிவிப்பு
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கோடை விடுமுறை ஏப்ரல் மற்றும் மே மாதம் விடப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பள்ளி விடுமுறை கால அட்டவணையை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசு ஒரு முக்கிய விவாதத்தை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, இந்த காலகட்டத்தில் அதிக வெப்பம் நிலவுவதால், மாணவர்கள் வெளியில் விளையாடுவதும், பயணங்கள் மேற்கொள்வதும் கடினமாக இருக்கும்.
அதேசமயம், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதனால், கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் வானிலை எச்சரிக்கைகள் காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பல சமயங்களில், பள்ளி கட்டிடங்கள் மழை நிவாரண முகாம்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது மாணவர்களின் கல்வியை அதிகம் பாதிக்கின்றது.
இதற்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தனது Facebook பக்கத்தில் ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல்- மே மாதம் வழங்கப்படும் கோடை விடுமுறையை ஜூன்- ஜூலை மாதங்களுக்கு மாற்றி அமைக்கும் யோசனையை கூறியுள்ளார்.
இது குறித்து ஓன்மனோரம்மா நடத்திய கருத்துக்கணிப்பில், 42% பேர் விடுமுறையை ஜூன்-ஜூலைக்கு மாற்றுவதை ஆதரித்துள்ளனர்.
அதேநேரத்தில், 30% பேர் தற்போதைய ஏப்ரல்-மே விடுமுறையே தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.
மேலும், சுமார் 27% பேர் மே-ஜூன் மாதங்களில் விடுமுறை அளிப்பது சமரசமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |