1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் திகதி தொடங்கிய நிலையில் மார்ச் 25ஆம் திகதி வரை தேர்வு நடைபெறுகிறது.
அதேபோல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ஆம் திகதி தொடங்கிய நிலையில், மார்ச் 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், தற்போது 1 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வு அட்டவணை மற்றும் கோடை விடுமுறைகள் குறித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு..,
தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி வரை இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெறும்.
மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெறும்.
இதையடுத்து, தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 22ஆம் திகதியில் இருந்து கோடை விடுமுறைகள் தொடங்கும்.
மேலும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் திகதியிலிருந்து கோடை விடுமுறைகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |