மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? முழு விபரம் இதோ
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கும் திகதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கான திகதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு கோடை விடுமுறை வழங்கும் திகதியும் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் ஏப்ரல் 13 ஆம் திகதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
2023-2024 கல்வியாண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்தவுடன் அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் பணிக்கான பயிற்சில் ஈடுப்பட வேண்டும்.
ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 1 வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
ஏப்ரல் 26ம் திகதி ஆண்டின் கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1 முதல் 5 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும், 6 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அட்டவணையின் அடிப்படையில் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.