பூமியை அழிக்க காத்திருக்கும் சூரியன் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
பூமியில் ஒட்சிசன் இல்லாத அளவிற்கு வளிமண்டலத்தை சிதைத்து, பூமியை எரிப்பதற்கு சூரியன் தயாராக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியை அழிக்க காத்திருக்கும் சூரியன்
பூமிக்கு அருகில் இருக்கும் கிரகங்கள் ஏதேனும் உயிரினங்கள் வாழ்கிறதா என்பது குறித்து பல விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இயற்கையால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்தும் ஆக்கம் குறித்தும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் பூமியில் வாழும் அனைத்து உயிரினத்திற்கும் மனித குலத்திற்கும் வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்துக்கொள்ள முடியும்.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக நாசா, இஸ்ரோ மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகின்றது.
இந்நிலையில் நேச்சர் ஜியோசைன்ஸ் செய்த ஆய்வில், பூமியின் முடிவு சூரியனிடம் தான் என தெரியவந்துள்ளது.
எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
அதாவது தற்போது பூமியில் அதிக வெப்பத்தை சூரியன் ஏற்படுத்தியது, அடுத்தடுத்து வெப்பத்தை அதிகரித்து, வளிமண்டலத்தை சிதைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுவாசிப்பதற்கு அத்தியாவசியமான ஒட்சிசன் இல்லாமல் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும் எனவும் கதிர் வீச்சுகளால் சூரியன் பூமியை சாம்பலாக்கிவிடும் எனவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
அதற்கு முன் சூரியனுக்கு அருகில் இருக்கும் மெர்குரி, வீனஸ் ஆகிய கிரகங்களை சூரியன் சாம்பலாக்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.
அதன்பிறகு அதிக வெப்பம் பூமியை நோக்கி வரும்போது வடக்கு மற்றும் தென் துருவங்களின் பளிப்பாறைகள் உருகி உலகம் வெள்ளத்தால் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய வெப்பத்தால், உலகை மூழ்கடித்த தண்ணீர் முழுவதும் ஆவியாகிவிடும். அப்போது கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவங்கள் எல்லாம் நிகழ்வதற்கு சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |