ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா?
ஒரு திரைப்படம் உருவாவதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒருவர்.
அந்தவகையில், கலாநிதி மாறன் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார் .
கரண் ஜோஹர் மற்றும் ஆதித்யா சோப்ரா போன்ற மிகப்பெரிய தயாரிப்பாளர்களை தாண்டி அதிக சொத்து மதிப்பை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வைத்துள்ளார்.
தற்போது இந்தியாவின் 80வது பணக்காரராக உள்ளார் சன் குழுமத்தின் நிறுவனம் கலாநிதி மாறன். ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 1205ஆம் பெரும் பணக்காரர் ஆவார்.
அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 34,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்படங்களை தாண்டி ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகளை வைத்துள்ளார் கலாநிதி மாறன்.
கலாநிதி , முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு 1964 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி சென்னையில் பிறந்தார்.
இவர் சென்னையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார். பின் லயோலா கல்லூரியில், இளங்கலை வணிகவியல் படிப்பை படித்து முடித்த கலாநிதி மாறன், 1993ல் சன் டிவியை தொடங்கினார்.
அது இன்று மிகப்பெரிய சன் குழுமமாக வளர்ந்து தற்போது சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இயங்கி வருகிறது.
மேலும், சன் குழுமத்தில் மொத்தம் 30 தொலைக்காட்சி சேனல்கள், 2 செய்தித்தாள்கள், ஐந்து இதழ்கள், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், Sun NXT ஓடிடி, Sun Direct மற்றும் இரண்டு கிரிக்கெட் அணிகள் ஆகியவை உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |