சிம்மம் செல்லும் சூரியன்! ஆவணி மாதம் யாருக்கு எல்லாம் ராஜயோகப்பலன்களை அள்ளித்தர போகுது?

Horoscope life Spiritual
By Kishanthini Aug 17, 2021 12:06 PM GMT
Report
Courtesy: Boldsky

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான ஆவணி பிறக்கிறது. 

 இப்படி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆவணி மாத ராசிபலனை தற்போது பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் பணிகளை முடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். மொத்தத்தில் தொழிலாளர்கள் இக்காலம் திருப்திகரமாக இருக்கும்.

உங்களில் சிலர் உயர் அதிகாரிகரிடம் இருந்து சற்று அதிக பொறுப்புக்களைப் பெறலாம். வணிகத் துறையில் இருப்பவர்கள் நிலையான வளர்ச்சியைப் பெற இக்காலத்தில் உதவி கிட்டும். முக்கியமாக உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். ஆகவே இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் உங்களை அதிக பிடிவாதம் பிடிப்பவராக ஆக்குகிறது.

இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடனும், அன்புக்குரியவருடனும் நல்ல தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை எடுத்து செய்ய சோம்பலாக இருப்பீர்கள். இக்காலத்தில் சிறு பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் செலவு சற்று அதிகரிக்கலாம். எனவே உங்கள் நிதியை நிலையை கவனித்துக் கொள்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த இடமாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேசும் திறன் சிறப்பாக இருப்பதோடு, அறிவும் மேம்படும். மேலும் புத்திசாலித்தனமாக தங்களின் பணத்தை செலவிடுவீர்கள்.

ஊடகம், சந்தைப்படுத்தல் அல்லது பத்திரிகை துறையில் பணிபுரியும் நபர்கள் அலுவலகத்தில் நேரம் சாதகமாக இருக்கும்.

பேராசிரியர்களாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ இருப்பவர்கள் தங்கள் தொழில்முறையில் நிலையான வளர்ச்சியைக் காணலாம். ஒட்டுமொத்தமாக, உங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய இது ஒரு நல்ல கட்டமாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். நண்பரின் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க பயப்படுவீர்கள்.

ஆனால், எப்படியாவது நீங்கள் உங்கள் பணியிடத்தைச் சுற்றி புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் தவறான செயலால் நீங்கள் உறவில் இருப்பது கடினமாக இருக்கலாம்.

மருத்துவமனையில் பணிபுரியும் அல்லது ஹோட்டல் அல்லது உணவகங்களை நடத்துபவர்கள் இக்காலத்தில் விரும்பிய லாபத்தைப் பெறலாம். இக்காலகட்டத்தில் நீங்கள் உங்கள் ஞாபக சக்தியை சிறப்பாக இருப்பதால், நீங்கள் அவசரமாக முடிவெடுப்பது எளிதாக இருக்கும்.

சிம்மம்

சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் இலக்குகளை அடைய, ஒரு பெரிய மலையையும் நகர்த்த தயாராக இருப்பீர்கள்.

தொழில் செய்யும் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வணிகத்தை ஆராய்வதற்கு ஒரு நல்ல காலமாக இருக்கும். தைரியமான முடிவுகளை எடுக்க தயங்கமாட்டீர்கள்.

உங்களின் புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிம்ம ராசிக்கார மாணவர்கள் அரசுத் துறையில் விரும்பிய வேலையைப் பெறலாம்.

கன்னி

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சுய முன்னேற்ற பாதையில் தொடர்ந்து முன்னேறுவார்கள். இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பீர்கள்.

கற்பித்தல், எழுத்து அல்லது கல்வித் துறைகளுடன் தொடர்புடையவர்கள் இக்காலகட்டத்தில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். மன அமைதிக்காக யோகா வகுப்புகளில் சேர்வீர்கள்.

தொழில்முறை தொழிலாளர்கள் நீண்ட நேரம் தங்கள் வேலையில் கவனம் செலுத்தக்கூடும். இக்காலத்தில் உங்கள் பணியில் மேலும் முன்னேறுவதற்கு உங்கள் சகாக்கள் அல்லது முதலாளியிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதற்காக சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

உங்கள் சமூக வலைப்பின்னலை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் புதிய தொடர்புகளை உருவாக்குவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் உறவுகளுடன் நீண்ட கால உறவுகளை நீங்கள் உருவாக்கலாம்.

கார்பரேட் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களின் வெற்றியைப் பார்த்து தங்கள் கவனத்தை இழக்க நேரிடும். சூரியன் துலாம் ராசியில் பலவீனமான நிலையில் இருப்பதால், இக்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மிகவும் தைரியமாக இருப்பீர்கள். இது உங்களின் ஆளுமையை பிரதிபலிக்கும். மேலும் இது உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவரும். எனினும், இக்காலத்தில் உங்களால் எந்தவிதமான விமர்சனத்தையும் நேர்மறையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

நீங்கள் அதிக சுயமரியாதையைக் கொண்டிருப்பீர்கள். இது சில சமயங்களில் அகங்காரமாகவும் ஆணவமாகவும் மாறும். மேலும் உங்கள் வேலையில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.

மேலும் உங்கள் நிறுவனத்தில் நல்ல பெயரைப் பெற முடியும். நீங்கள் ஏதாவது நிர்வாகப் பதவியில் அல்லது அரசு வேலையில் இருந்தால் மிகவும் வெற்றிகரமாக இருப்பீர்கள்.

உங்கள் தலைமைத்துவ திறமைகள் நன்கு பாராட்டப்படும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். இக்காலத்தில் அறியப்படாத ஆதாரங்கள் அல்லது மூதாதையர் சொத்திலிருந்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பொறுப்பான நபர்களாக இருப்பார்கள். இக்காலத்தில் தங்களின் அறிவு மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்த ஆர்வமாக இருப்பார்கள்.

சிறு பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் திட்டங்களை முடிக்க நீங்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பீர்கள்.

ஆனால், யாராவது உங்களுக்கு எதிராகச் செல்லும் போது, நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் தந்தைக்கு அதிகபட்ச மரியாதையைக் கொடுங்கள். இது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்தலாம்.

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்ததாக இருக்காது. ஏனெனில் மகர ராசியின் அதிபதியான சனியுடன் சூரியனுக்கு நட்பற்ற உறவு உள்ளது.

எனவே நீங்கள் கடின உழைப்பின்றி விரும்பிய வெற்றியைப் பெற முடியாது. முக்கியமாக உங்கள் இலக்கை அடைய கடினமாக இருக்கும். எனினும், நீங்கள் உங்கள் சக பணியாளர்களிடமிருந்தோ அல்லது முதலாளியிடமிருந்தோ பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

திருமண வாழ்க்கையில், நீங்கள் உங்கள் துணையுடன் விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருப்பீர்கள். சிம்மத்தின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லும் இக்காலத்தில், சனி சிறிது கருணை காட்டாவிட்டால், மகர ராசிக்காரர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, இது உங்களுக்கு ஒரு சவாலான நேரம் இருக்கலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் மிகவும் சோம்பேறியாக, மோசமான நடத்தையுடன் இருப்பார்கள்.

சூரியன் அதன் எதிரியின் ராசிக்கு செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் தடைகள் ஏற்படக்கூடும். தொழில்முறை முன்னணியில், உங்கள் திட்டப் பணிகளை நிறைவேற்ற நீங்கள் முன்னணி நபராக இருப்பீர்கள்.

உங்கள் நண்பர் வட்டத்தை சமூக ஊடக தளங்கள் வழியாக விரிவாக்கலாம். ஆனால் முன்னேறும் போது, சற்று சுதந்திரத்தை தேடுவீர்கள். நிதியைப் பொறுத்தவரை, பண சேமிப்பு காரணமாக உங்கள் நிதி இலக்குகளை அடைவீர்கள்.

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சில அதிசயங்கள் நிகழலாம். இக்காலத்தில் அவர்களின் கேட்கும் மற்றும் கற்றல் திறன் மேம்படும்.

மேலும் இக்காலத்தில் சிறந்த புரிதல் மற்றும் மேலாண்மை திறன்களைக் கொண்டிருப்பீர்கள். மறுபுறம் வணிகர்கள் தங்களின் இலக்கை இழக்க நேரிடும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இக்காலம் உங்களின் தனிப்பட்ட திறன்களை அதிகரிக்க ஒரு நல்ல காலம்.  

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US