பிரபல செய்திவாசிப்பாளரை சாலையில் மடக்கி லவ் யூ சொன்ன இளைஞன்
பிரபல செய்திவாசிப்பாளர் ரத்னாவை சாலையில் மடக்கி இளைஞன் தன் காதலை வெளிப்படுத்தியதாக பதிவு ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரத்னாவுக்கு லவ் சொன்ன இளைஞன்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான் ரத்னா. இவர் செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல், சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
இவர் சமூகவலைத்தளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது சமூகவலைத்தளங்களில் ஒரு கசப்பான சம்பவத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நான் 1995ம் ஆண்டு காலக்கட்டத்தில் கொஞ்சம் பிரபலமாக இருந்தேன்.
நான் ஷூட்டிங் முடித்து விட்டு Studioவில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, வள்ளூவர் கோட்டம் வழியாக என் இரு சக்கர வண்டியில் வந்துக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு 25 வயது இளைஞன் திடீரென என்னை வழிமறித்தான். நீங்கள் suntv ரத்னா தானே.
உங்களை எனக்கு பிடிக்கும். நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினான். அப்போது எனக்கு ரொம்ப பயம் வந்துவிட்டது. என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றேன்.
உடனே ஏமாற்றமடைந்த அவன், உடனே ஒரு கேள்வி கேட்டான். உங்களுக்கு யாராவது தங்கச்சி இருக்காங்களா... இருந்தா சொல்லுங்கள்... நான் அவரை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றான். அய்யோ... என்ன இது கொடுமை என்று நான் உடனே அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்.
இந்த போட்டோ தான் அன்றைக்கு அந்த Studioவில் எடுத்தேன். இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது அந்த பையன் ஞாபகம் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |