புதிய பிரித்தானிய பிரதமர் இவர் தான்: வெளிவரும் உறுதியான தகவல்
முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக், 100 எண்ணிக்கையை எட்டியுள்ளதாக புதிய தகவல்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்புக்கு வருவது உறுதி
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெறும் ஒரு தலைவரை அந்த கட்சி அறிவிக்க இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது புதிய பிரதமருக்கான போட்டியில் களம் கண்டுள்ள மூவரில் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக், 100 எண்ணிக்கையை எட்டியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Credit: Doug Seeburg
கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் ரிஷி சுனக் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வருவதை வெளிப்படையாக ஆதரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 100 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக ரிஷி சுனக் தரப்பு அறிவித்துள்ளது.
இதனால், பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்புக்கு வருவது உறுதியாகியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
Credit: Reuters