காசா மருத்துவமனையை தாக்கியது அவர்கள்தான்... அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ள தகவல்
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த அவர், காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது உங்கள் தரப்பு போல தோன்றவில்லை என்று கூறியுள்ளார்.
நீங்கள் அல்ல, அவர்கள்தான்
காசா மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தன்னை ஆழ்ந்த கவலையும், அதே நேரத்தில் கோபமும் அடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன்.
நான் பார்த்த வரையில், இந்த தாக்குதலை நிகழ்த்தியது நீங்கள் அல்ல, அந்தக் குழு என்றே தோன்றுகிறது என்று அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கூறினார்.
ஆனால், அது பலருக்கு உறுதியாகத் தெரியாது என்று கூறிய ஜோ பைடன், ஆகவே, நாம் பல விடயங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்றார். ஆனால், அவர் அந்தக் குழு என்று யாரைச் சொன்னார் என விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பாலஸ்தீனிய அதிகாரிகள் இஸ்ரேல் மீது பழி போட, இஸ்ரேலோ, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு வீசிய ராக்கெட் ஒன்று தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்துவிட்டதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |