தேசியத்தை தோல் நிறத்துடன் இணைத்து பார்க்க வேண்டாம் - ரிஷி சுனக் எச்சரிக்கை
Sunak warns against skin colour nationality test: தேசியத்தை தோல் நிறத்துடன் இணைத்து பார்க்க வேண்டாம் என ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
ரிஷி சுனக் எச்சரிக்கை
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தேசியத்தை தோல் நிறத்துடன் இணைத்து பார்க்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது Sunday Times கட்டுரையிலும், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த Marylebone Cricket Club Cowdrey Lecture-இலும், “பிரித்தானியாவின் மிகப்பெரிய ஜனநாயக சாதனை சவாலுக்கு உள்ளாகிறது” எனக் கூறினார்.
“நாம் தோல் நிறத்தை தேசியத்துடன் இணைத்துப் பார்க்கத் தொடங்கினால், அது ஆபத்தானது. 1707-இல் இருந்தவர்களை விட சமீபத்தில் வந்த புலம்பெயர்ந்தோர் எப்போதும் முழுமையான பிரித்தானியராக முடியாது எனக் கருதுவது தவறு” என சுனக் தெரிவித்துள்ளார்.
அவர், 1990-இல் டோரி எம்.பி. நார்மன் டெபிட் முன்வைத்த “Tebbit Test” குறித்து பேசினார். “அந்த சோதனையை யாராலும் கடக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவை உங்கள் வீட்டாகக் கருதி ஆதரித்தால், தோல் நிறம் முக்கியமில்லை” என சுனக் குறிப்பிட்டார்.
வருத்தம்
தனது அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “சவுத்தாம்ப்டனில் பிறந்த நான், சிறுவயதில் இங்கிலாந்து, ஹாம்ப்ஷயர், Saints அணிகளை ஆதரித்தேன். எனது பிரதமர் பதவி காலத்தில், என் மதம் அல்லது இனத்தை யாரும் எதிர்க்கவில்லை” எனக் கூறினார்.
ஆனால், சிலர் “மாநிறத்தில் ஹிந்துவாக இருக்கும் இவர், ஆங்கிலேயராக இருக்க முடியுமா” என சந்தேகம் எழுப்பியதை அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
“இங்கே வாழும், பிரிட்டிஷ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்கிற, நாட்டின் மதிப்புகளை பின்பற்றும் புலம்பெயர்ந்தோரை தோல் நிறம் காரணமாக புறக்கணிக்கக் கூடாது. விளையாட்டு என்பது, குறிப்பாக கிரிக்கெட், ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் சக்தி” என சுனக் கூறினார்.
அவர், “இனம் மீண்டும் அரசியலில் புகுந்துவிடக் கூடாது. பிரித்தானிய மக்கள் ஒருவருக்கொருவர் எதிராக நிற்கக் கூடாது” என அறிவுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |