தட்டித்தூக்கிய வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித்! மோசமான சாதனையில் அவுஸ்திரேலியா
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஹர்ஷித் ராணா மிரட்டல்
சிட்னியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஹெட் 29 (25) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மார்ஷ் 41 (50) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில் போல்டானார்.
பின்னர் மேத்யூ ஷார்ட் 30 (41) ஓட்டங்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி 33.4 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், ஹர்ஷித் ராணாவின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அவுஸ்திரேலியா 46.4 ஓவரில் 236 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரென்ஷா 56 ஓட்டங்கள்
மேத்யூ ரென்ஷா (Matthew Renshaw) 56 (58) ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 24 (37) ஓட்டங்களும், கூப்பர் கோனொலி 23 (34) ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் 53 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா பறிகொடுத்தது. இது அவுஸ்திரேலியாவின் நான்காவது மோசமான துடுப்பாட்டம் ஆகும்.
இதற்கு முன் 2005ஆம் ஆண்டில் கடைசி 7 விக்கெட்டுகளை 47 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அவுஸ்திரேலியா எடுத்திருந்தது.
இந்திய அணியின் தரப்பில் ஹர்ஷித் ராணா (Harshit Rana) 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |