சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் சுந்தர்.சி - எந்த கட்சியில் தெரியுமா?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர்.சி வேட்பாளராக களமிறங்குகிறார்.
சட்டமன்ற தேர்தலில் சுந்தர்.சி போட்டி
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மத்திய தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. இதில், இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட உள்ளது.
பாஜக ஒதுக்கும் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில்,மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக (AIADMK) சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு திரு. சுந்தர் சி அவர்களை வேட்பாளராக நிறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். pic.twitter.com/p7GkYscjeE
— A.C. Shanmugam (@DrACSofficial) March 28, 2026
பாஜக சார்பில் ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் குறித்து மார்ச் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டு சுமார் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சுந்தர்.சியின் மனைவி குஷ்பு தமிழ்நாடு பாஜகவின் துணை தலைவராக உள்ளார்.

இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில்ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனிடம் தோல்வியை தழுவினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |