சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா?
கூகிள் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சிறப்பான சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது தெரியுமா?
கூகிள் ஊழியர் ஒருவர்
கூகிளின் தாய் நிறுவனமான Alphabet Inc, அதன் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளத்தை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை 10.73 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை ஊதியமாகப் பெற்றுள்ளார்.
ஆனால் 2023ல் 8.8 மில்லியன் டொலர் தொகையே அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதில் கிட்டத்தட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், சராசரி முழுநேர கூகிள் ஊழியர் ஒருவர் கடந்த ஆண்டு 331,894 அமெரிக்க டொலர்களை ஊதியமாகப் பெற்றுள்ளார். இது 2023 ஆம் ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும்.
சுந்தர் பிச்சையின் சம்பளமானது பெரும்பாலும் பங்குகளாகவே அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிற சலுகைகளும் அவர் பெறுகிறார். சுந்தர் பிச்சையின் அடிப்படை ஊதியம் என்பது 2 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
அத்துடன் சுந்தர் பிச்சையின் பாதுகாப்பிற்காக மட்டும் Alphabet நிறுவனம் சுமார் 8.27 மில்லியன் டொலர்களை (ரூ 70.43 கோடி) செலவிடுகிறது. இது முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட 6.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட 22 சதவீதம் அதிகமாகும்.
தலைமை நிர்வாக அதிகாரி
கூகிள் நிறுவனத்தில் சுந்தை பிச்சை ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு காரணமாகவே அவருக்கு உரிய பாதுக்காப்பை வழங்கி வருவதாக Alphabet நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவருக்கான பாதுகாப்பு அம்சங்களில் குடியிருப்புக்கான பாதுகாப்பு மற்றும் ஆலோசனை கட்டணங்கள், பாதுகாப்பு கண்காணிப்பு சேவைகள், கார் மற்றும் சாரதி சேவைகள் மற்றும் அனைத்து பயணங்களின் போதும் தனிப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும்.
சுந்தர் பிச்சை 2004 முதல் கூகிளில் பணியாற்றி வருகிறார். 2015 இல் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். 2019 முதல் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 29 நிலவரப்படி அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |