கோடிகளில் புரளும் தமிழன்., நிறைவேறாத ஆசையுடன் வாழும் சுந்தர் பிச்சை
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான GOOGLE-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் தமிழனுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது.
இந்தியாவுக்கு உலகளவில் பெருமை சேர்த்ததில், இந்தியாவை உலகளாவிய சக்தியாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றிய பல இந்தியர்கள் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக விளங்கும் தமிழன், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அப்படிப்பட்டவர்களில் ஒருவர். சுந்தர் பிச்சை தற்போது ஐடி துறையில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரு உதவேகமாக, முன்னேடியாக மாறியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.
சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஜூன் 10, 1972 அன்று தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். அவரது தாயார் லட்சுமி ஸ்டெனோகிராஃபராகவும் மற்றும் அவரது தந்தை ரகுநாத் பிச்சை பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான GEC-ல் மின் பொறியாளராக இருந்தார்.
ET
சுந்தர் பிச்சை தனது பள்ளிப்படிப்பை சென்னை- அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியிலும், பிடெக் படிப்பை ஐஐடி காரக்பூரில் முடித்தார். உலோகவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
ஐஐடியில் பிடெக் முடித்த பிறகு, சுந்தர் பிச்சை மேற்படிப்புக்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், பின்னர் வார்டன் பள்ளியில் எம்பிஏ முடித்தார்.
சுந்தர் பிச்சை 2004-ல் கூகுளில் சேர்ந்தார் மற்றும் ஆரம்பத்தில் கூகுளின் தேடல் பட்டியில் ஒரு சிறிய குழுவுடன் பணியாற்றினார். இதற்குப் பிறகு, ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட கூகுளின் பல தயாரிப்புகளின் மேம்பாட்டிலும் பணியாற்றினார். சுந்தர் பிச்சை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக 2015-ல் நியமிக்கப்பட்டார்.
PTI
கிரிக்கெட்டில் ஆர்வம்
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கிரிக்கெட் பார்ப்பதிலும் விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டவர். சிறுவயதில் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள தனது பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் அவரது அணியும் பல போட்டிகளில் வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுந்தர் பிச்சை சுனில் கவாஸ்கர் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர். சுந்தர் பிச்சைக்கு டி20 பார்மட் அதிகம் பிடிக்காதாம்.
PTI
கிரிக்கெட் வீரராக ஆசை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஒருமுறை பேட்டியில் கிரிக்கெட் வீரராக விருப்பட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் அவர் இப்போது கிரிக்கெட் வீராக இல்லை. அதற்கும் மேலாக அவர் உலகம் அறியும் தமிழனாக, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பட நிறுவனமாக கருதப்படும் Google நிறுவனத்தின் தலைமை நிறைவாக அதிகாரியாக இருக்கிறார்.
WSJ
அவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இந்திய பணமதிப்பில் ரூபாய் 44 லட்சம் சம்பளம் என கூறப்படுகிறது. IIFL Hurun India Rich List 2022-ன் படி சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 5300 கோடி ரூபாய் ஆகும்.
கோடிகளில் புரளும் ஒருவராக இருந்தும் தன் வாழ்க்கையில் விருப்பப்பட்டு நிறைவேறாமல் போன ஆசையாக இந்த கிரிக்கெட்டை சொல்லலாம்.
PTI
PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.Join Now
Sundar Pichai Playing Cricket, Google CEO, Sundar Pichai Cricket Interest, Indian Origin CEO, Sundar Pichai News in Tamil