இடியட் என கூகுளில் தேடினால் டிரம்ப் படம் காட்டப்படுவது ஏன்? சுந்தர் பிச்சை விளக்கம்
இடியட் என கூகுளில் தேடினால் டிரம்ப் படம் காட்டப்படுவது ஏன் என சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
இடியட் தேடினால் டிரம்ப் படம்
Google search என்ற தேடுபொறியில் பயனர்கள் என்ன தேடினாலும், அதற்கு ஏற்ற பதில்களை வழங்கி, இணைய தேடல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கூகிளில் Idiot என தேடும் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புகைப்படத்தை காட்டியது.
கூகிள் நிறுவனம் தவறான தகவல்களை தருவதாகவும், தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க நீதித்துறை விளக்கம் கேட்ட நிலையில், கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார்.
கூகிள் தேடல் முடிவுகளை தனிப்பட்ட மனிதர்கள் கட்டுப்படுத்துகிறார்களா அல்லது தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.
கூகிள் எப்படி பதில் வழங்கும்?
இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, "கூகிள் தேடல் முறை முழுவதும் 'Web Crawlers' என்ற மென்பொருளின் மூலம் செயல்படுகிறது.
இந்த Web Crawlers, இணையத்தில் உள்ள பில்லியன் கணக்கான இணையை பக்கங்களை ஸ்கேன் செய்து, அதில் உள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து ஒரு பட்டியலை உருவாக்கும்.
பயனர்கள் கூகிளில் தேடும் போது, இந்த பட்டியலை ஆராய்ந்து நூற்றுக்கணக்கான காரணிகளின் அடிப்படையில் மிகபொருத்தமான முடிவுகளை காட்டும்.
டிரம்ப்பின் புகைப்படத்துடன் idiot என்ற சொல்லை இணைத்து பலரும் கூகிளில் பதிவேற்றியிருப்பார்கள். அதனால் அப்படி தோன்றி இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், அப்படியானால் திரைக்கு பின்னால் அமர்ந்து ஒரு சிறிய மனிதர் நாம் என்ன முடிவுகளை பெறுகிறோம் என கட்டுப்படுத்தவில்லையா என நகைச்சுவையாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, கடந்த ஆண்டில் மட்டும் 3 ட்ரில்லியன் கூகிள் தேடல் நடைபெற்றுள்ளது. எனவே நாங்கள் இதனை மனிதர்கள் மூலம் கட்டுப்படுத்தவில்லை என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |