வீடே மணக்கும் நாட்டு கோழி வறுவல்... ஒரு தட்டு சோறு இருந்தால் சூப்பர்!
நாட்டுக்கோழி பிராய்லர் கோழியுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியமானது. ஆனால் சமைக்க அதிக நேரம் ஆகும். நாட்டுக்கோழியை 4 - 6 விசில் பிரஷர் குக்கரில் சமைத்தால் போதும்.
நாட்டுக்கோழியின் ஆரோக்கிய நன்மைகளுக்காக பிராய்லரை விட நாட்டுக்கோழியை விரும்புவர்கள் அதிகமாக இருகிறார்கள்.
கோழியை வைத்து பலரும் பல விதமான ரெசிபியை முயற்சித்து பார்ப்பது வழக்கம். பள்ளிபாளையம் சிக்கன், பிச்சி போட்ட நாட்டுக்கோழி, நாட்டு கோழி குழம்பு, நாட்டு கோழி சூப் போன்ற ரெசிபியை செய்வார்கள்.
அதுபோலவே நாட்டுக்கோழியை வைத்து எப்படி சூப்பரான வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையானப் பொருட்கள்
- 500 கிராம் - நாட்டுக் கோழி
- 15 - வெங்காயம்
- 6 - காய்ந்த மிளகாய்
- 2 தேக்கரண்டி - பெருஞ்சீரகம்
- 1 டீஸ்பூன் - கொத்தமல்லி விதைகள்
- 1 டீஸ்பூன் - இஞ்சி-பூண்டு விழுது
- 1/2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
- தேவைக்கேற்ப - உப்பு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- 1/4 கப் - எண்ணெய்
செய்முறை
-
பிரஷர் குக்கரில் நாட்டு கோழி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை சமைக்கவும்.
-
அடுத்து மிக்ஸியில் வெங்காயம், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
-
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை அரைத்த மசாலா, உப்பு சேர்த்து 2 - 3 நிமிடங்கள் சமைக்கவும்.
-
பிறகு வேக வைத்து எடுத்த நாட்டுக் கோழியை மசாலாவுடன் நன்கு பூச வேண்டும்.
- இறுதியாக மிதமான தீயில் 7-10 நிமிடங்கள் வறுத்தெடுத்து, கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |