6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி..22 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசிய நேபாள வீரர்
Lokesh Bam 52 in 22 balls vs japan: ஜப்பான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆசியப் போட்டிகள் டி20 மழையால் கைவிடப்பட்டது.
ஜப்பானுக்கு எதிரான ஆசிய போட்டி டி20யில் நேபாளம் 15 ஓவர்களில் 149 ஓட்டங்கள் எடுக்க, மழையால் போட்டி கைவிடப்பட்டது.
சந்தீப் ஜோரா அதிரடி
நேபாளம் மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஆசியப் போட்டிகள் டி20 நிஸ்ஷினில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற ஜப்பான் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, நேபாளம் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
குஷால் 4 ஓட்டங்களிலும், ஆசிப் 21 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சந்தீப் ஜோரா அதிரடியில் மிரட்ட, குஷால் மல்லா (2), குல்ஸன் ஜா (2) இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
லோகேஷ் சரவெடி ஆட்டம்
அப்போது லோகேஷ் பம், சந்தீப்புடன் கைகோர்க்க இருவரும் ஜப்பான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 149 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் கைவிடப்பட்டது.

சந்தீப் ஜோரா 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்களுடனும், லோகேஷ் பம் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 52 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
Nepal posted 149/4 in 15 overs against Japan in the 5th Match of Group A at the Asian Games 2026. The match was reduced to 15 overs due to rain.
— CricInformer (@CricInformer) September 26, 2026
Sundeep Jora scored 57 off 32 balls, while Lokesh Bam played a quick 52 off 22 balls to help Nepal reach a strong total.
Japan need… pic.twitter.com/u2dSAGnhjD