பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த கோர விபத்து: இருவர் மீது பாய்ந்த குற்றச்சாட்டுகள்
சண்டர்லாந்து முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த கோர விபத்தை தொடர்ந்து இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதியோர் இல்லத்தில் விபத்து
பிரித்தானியாவின் சண்டர்லாந்தின் விதர்வாக் பகுதியில் உள்ள முதியோர் இல்லம் (care home) மீது திருடப்பட்ட கார் மோதிய கோர விபத்து தொடர்பாக இரண்டு நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த துயர சம்பவத்தில் இரண்டு முதியோர் உயிரிழந்தனர். புதன்கிழமை இரவு 9:40 மணியளவில் பொலிஸ் துரத்தலின் போது இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக 'ஹைக்ளிஃப் கேர் ஹோம்' (Highcliffe Care Home) உடனடியாக வெளியேற்றப்பட வேண்டியிருந்தது.
நார்தம்ப்ரியா பொலிஸ் (Northumbria Police) உறுதிப்படுத்திய தகவலின்படி, திருடப்பட்டதாகக் கூறப்பட்ட பி.எம்.டபிள்யூ (BMW) கார் முதியோர் இல்லத்திற்குள் புகுந்ததில், 90 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 80 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணும் உயிரிழந்தனர்.’
இருவர் மீது குற்றச்சாட்டுகள்
இந்த விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 21 வயதுடைய இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நார்தம்ப்ரியா பொலிஸ் அறிவித்துள்ளது.
சாம் அஸ்கரி-தபார் (Sam Asgari-Tabar) என்ற நபர் சண்டர்லாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி கடுமையான காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
ரீஸ் பாரிஷ் (Reece Parish) என்ற நபர் மீது சண்டர்லாந்தின் ஃபோர்டாம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், அவர் மீதும் கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அஸ்கரி-தபார் மற்றும் பாரிஷ் ஆகிய இருவரும் சனிக்கிழமை நியூகேஸில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |