சச்சின் புத்தகத்திலேந்து அதை மட்டும் உருவிகோங்க கோலி! அவரின் நிலை கவலையா இருக்கு... அட்வைஸ் செய்த சுனில் கவாஸ்கர்
கிரிக்கெட்டில் கோலியின் தற்போதைய நிலை கவலையளிப்பதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப் பிள்ளையாகி விட்டாரா விராட் கோலி என கூறும் அளவுக்கு 23 இன்னிங்சில் 7 முறை அவரிடம் ஆட்டமிழந்துள்ளார்.
அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயன் பந்துவீச்சிலும் இதேபோன்று கோலி 7 முறை ஆட்டமிழந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் போன்று இந்த முறையும் இங்கிலாந்து சோகமான பயணமாக கோலிக்கு அமைந்துவிடும்போல் தெரிகிறது. 50 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கவில்லை, 2 ஆண்டுகள் ஆகிவிட்டது சதம் எடுத்து.
இன்னும் கொஞ்ச நாள் போனால் கோலி அரைசதம் எடுத்து இவ்வளவு நாளாகி விட்டது, 25 எடுத்து இவ்வளவு மாதங்களாகி விட்டது என்றெல்லாம் செய்திகள் வரும் முன் கோலி ஆட்டத்தில் கவனம் செலுத்துவது நல்லது என பலரும் கூறுகிறார்கள்.
கோலி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், கோலி உடனடியாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு போன் செய்து தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும். கோலியின் நிலை எனக்கு கவலையளிக்கிறது.
2014-ல் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு அருகில் வரும் பந்துகளில் அவுட் ஆகிக் கொண்டிருந்தார். இப்போது மேலும் வெளியே செல்லும், அதாவது 5, 6, 7-ம் ஸ்டம்புக்கு வரும் பந்துகளுக்கு மட்டையை நீட்டி எட்ஜ் ஆகி வெளியேறுகிறார்.
ஆகவே கோலி சச்சின் புத்தகத்திலிருந்து அந்தப் பக்கத்தை மட்டும் உருவிக் கொள்வது நல்லது என அவருக்கு அட்வஸைகளை கவாஸ்கர் அள்ளி வீசியுள்ளார்.