“பையன் ரொம்ப நல்லா கிரிக்கெட் விளையாடுறான்” - சுனில் கவாஸ்கர் புகழும் வீரர் யார்?
சுனில் கவாஸ்கர் இந்திய இளம் வீரர் ஒருவரை பாராட்டி பேசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்தியா வென்றது.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று 2வது டி20 போட்டி இன்று நடக்கவுள்ளது.
இதனிடையே முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ், ஹர்சல் பட்டேல், ரவி பிஸ்னோய் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் ஹர்சல் படேல் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர். கடந்த சீசனில் மிக அருமையாக விளையாடினார் என தெரிவிக்கிறார். அதேபோல முன்பெல்லாம் வேகத்தை மாற்றி மாற்றி வீச ஹர்சல் படேல் தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றக் கொண்டு மாறியுள்ளதாகவும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.