விராட் கோலியை கடுமையாக எச்சரித்த சுனில் கவாஸ்கர் - அதிருப்தியடைந்த ரசிகர்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அகமதாபாத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஆனால் அவர் 8 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றமளித்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கோலியின் ஆக்ரோஷத்தை தூண்டி விக்கெட்டை எளிதாக வீழ்த்தினர். அல்சாரி ஜோசஃப் போட்ட பவுன்சர் பந்தை ஹூக் ஷாட் ஆடி தூக்கி அடிக்க முயன்ற போது பேட்டின் நுனியில் எட்ஜாகி கேட்ச்சானது.
இதனால் கோலியின் பேட்டிங் மீண்டும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில் கோலி இதை பிரச்சனையை எதிர்கொண்டார். விராட் கோலிக்கு பவுன்சர் பந்து போட்டால் ஹூக் ஷாட் அடிப்பது மிகவும் பிடிக்கும். அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நேரத்தில் தான் அவர் கவனமாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.