எல்லாத்தையும் மறந்துடுவாங்க... இந்தியா தோல்வி- வெளுத்து வாங்கிய கவாஸ்கர்
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அசத்தல் வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணியிலிருந்து நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
வெளுத்து வாங்கிய கவாஸ்கர்
இந்நிலையில், இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், இந்திய அணி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால்தான் வெற்றிக்கு செல்ல முடியும்.
90 அல்லது 100 ரன்கள் என்று பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும். ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்டம்பை நோக்கி தொடர்ந்து ஒரே லைனில் பந்துவீசியதால் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஃபில்டிங் செய்தனர்.
இதனால், இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்தனர். நேற்றைய ஆட்டத்தில் இந்த வித்தியாசத்தை கண்டேன். இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
இந்திய வீரர்கள் இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது. உலககோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்க நேரிடும் என்பதால் , இந்தியா பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்றார்.