தோனி போல் ஒரு கேப்டன் இனி வரப்போவது இல்லை- சுனில் கவாஸ்கர் புகழாரம்
தோனி போல் ஒரு கேப்டன் இனி வரப்போவது இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலிடத்தில் தோனி
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சுனில் கவாஸ்கர் புகழாரம்
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடினமான தருணங்களில் இருந்து எப்படி மீள்வது என்பது சிஎஸ்கேவுக்கு மட்டுமே தெரியும். அது தோனி கேப்டனாக இருந்தால் மட்டுமே முடியும். 200 போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது கடினமான ஒன்று. அது கேப்டனின் தனிப்பட்ட செயல்திறனையும் பாதிக்கும். ஆனால், தோனி போல் ஒரு கேப்டன் இருந்தது கிடையாது. இனி வரப்போவதும் இல்லை என்று புகழாரம் சூட்டினார்.