தோனிக்கு பிறகு ரோகித் சர்மாவுக்கு மட்டுமே நடந்திருக்கு - புகழ்ந்து தள்ளும் சுனில் கவாஸ்கர்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்திய அணி தனது 1000வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய கவாஸ்கர் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் பொழுது DRSஐ தோனி ரிவிய்யூ சிஸ்டம் என கூறுவேன். அது தற்போது ரோகித் சிஸ்டம் என்று கூறும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் உள்ளது என கூறியுள்ளார்.
முதல் ஒருநாள் போட்டியில் டேரன் சமி, நிக்கோலஸ் பூரன், சமர் புரூக் ஆகியோரது விக்கெட்டுகளை டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.