இது நடந்தால் இந்திய அணியால் தொடரை வெல்ல முடியும் - கவாஸ்கர்
இந்தியாவுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் என சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி
லார்ட்ஸில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மற்றும் கார்ஸ் ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணி தோல்வியால் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெல்ல முடியும்
அவர் கூறுகையில், "இது ஒரு நல்ல அணி. இந்தியா வலுவான பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளது. மான்செஸ்டரில் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயமாக அதிக உதவி கிடைக்கும். இது நமது பந்துவீச்சு தாக்குதலை மிகவும் சோதிக்கும். மான்செஸ்டர் துடுப்பாட்டர்களுக்கும் சிறப்பாக இருக்கும்.
ஏனெனில், அவர்கள் பந்து துடுப்பிற்கு வருவதை விரும்புகிறார்கள். ஒட்டுமொத்தமாக, பந்து நன்றாக வரும் ஒரு பிட்சாக இது இருக்கும். எனவே மான்செஸ்டரில் இந்தியா தொடரை சமன் செய்ய மிக நல்ல வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. இங்கிலாந்திற்கு லார்ட்ஸிலும், லீட்ஸிலும் அதிர்ஷ்டம் இருந்தது.
அதேபோல் இந்திய அணிக்கு மான்செஸ்டர் மற்றும் ஓவலில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல முடியும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |