இந்திய அணியை மட்டமாக எடைபோட்டதால் தான் இங்கிலாந்து தோத்தாங்க! வெளுத்து வாங்கிய பிரபல ஜாம்பவான்
இங்கிலாந்து அணி இந்திய அணியை எளிதாக எடை போட்டுவிட்டது என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஓவல் டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ஓவல் வெற்றி மூலம் இங்கிலாந்தின் தொடரை வெல்லும் வாய்ப்புக்கான கதவை அடைத்தது இந்திய அணி, மாறாக இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இங்கிலாந்து அணி முந்தைய டெஸ்ட் போட்டியில் எழுச்சி பெற்றிருக்கலாம் ஆனால் இனி நடக்காது என்றே தெரிகிறது.
இங்கிலாந்து அணியும் இங்கிலாந்து ஊடகங்களும் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி பேசி இந்தியா அளிக்கும் சவாலை புறந்தள்ளி விட்டனர்.
இங்கிலாந்தின் வீழ்ச்சி இந்திய அணியை மட்டமாக எடைபோட்டதால் தான். இந்த மனப்போக்குக்கு தொடரை விலையாகக் கொடுத்துள்ளனர், இனி இந்தத் தொடரை அவர்கள் வெல்ல முடியாது.
இந்தியா ஓவல் டெஸ்ட் 2வது இன்னிங்சில் 380 ரன்களை மட்டுமே எடுத்திருந்தால் இங்கிலாந்து 280 ரன்கள் பக்கம் விரட்ட வேண்டியிருந்திருக்கும் இது அவர்கள் அழுத்தத்தை குறைத்திருக்கும், ஆனால் 368 என்பது பெரிய பிரஷர் இலக்குதான்.
டெய்ல் எண்டர்கள் இந்தியாவுக்கு அந்தப் பங்களிப்பைச் செய்தனர், லார்ட்ஸில் அதைப்பார்த்தோம் இப்போது ஓவலிலும் பார்த்தோம் என கூறியுள்ளார்.