76,730 கோடிக்கு அதிபதியின் மருமகள் லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபர்! அப்படி என்ன செய்கிறார்?
இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரின் மருமகள், லண்டனில் தொடங்கியுள்ள தொழில் மூலம் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார்.
Bharti Enterprises Limited நிறுவனர் சுனில் மிட்டல் (66) இந்தியாவின் பாரிய தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவரது மொத்த சொத்து மதிப்பு 76, 730 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
சுனில் மிட்டலின் மருமகள் சாக்ஷி சப்ரா லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக மாறியுள்ளார். இவர் நடத்தி வரும் Foodhak உணவு சேவை நிறுவனம் தற்போது லண்டனில் பிரபலமான சேவையாக மாறியுள்ளது.
யார் இந்த சாக்ஷி சப்ரா?
டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பாடசாலையில் பயின்ற சாக்ஷி, பிரித்தானியாவின் பிரபலமான பார்மிங்காம் பல்கலைக்கழகத்தில் B.Sc. Biotechnology பட்டப்படிப்பை முடித்தார்.
அதன் பின்னர் MBA முடித்த சாக்ஷி, Cyber மற்றும் லண்டனை அடிப்படையாகக் கொண்ட EPIC Private Equity Ltd உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து Softbank-யில் வேலை பார்த்த சாக்ஷி, 10 ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
2015ஆம் ஆண்டில் சுனில் மிட்டலின் மகன் ஷ்ராவின் மிட்டலை திருமணம் செய்துகொள்கிறார் சாக்ஷி சப்ரா.
Foodhak
சாக்ஷி அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு என்ற இலக்கின் அடிப்படையில் தனது நிறுவனத்தை தொடங்கினார். 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆயுர்வேதத்தின் கொள்கைகளை இணைத்து ஆரோக்கிய உணவு விநியோகத்தை செய்து வருகிறது.
Foodhak தளத்தில் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதற்கு என்னென்ன சாப்பிட வேண்டும்? குறிப்பிட்ட அளவு உடல் எடையை குறைப்பதற்கு Meal Planning போன்ற பல்வேறு வசதிகள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
நமக்கு தேவையான ஒரு Meal Plan-ஐ உள்ளீடு செய்தால், அதற்கேற்றவாறு உணவு delivery செய்யப்படும். இந்த தளத்தில் நீண்ட கால அடிப்படையில் உடலை வலுவாக வைத்துக் கொள்வது, உடல் எடை குறைப்பு, ஆயுர்வேதம் அடிப்படையில் உடலை சுத்தப்படுத்தும் உணவுகள், Glycemic index குறைவாக இருக்கக்கூடிய உணவுகள், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான Meal Plans இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி வாடிக்கையாளர் Order செய்யும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்ற விவரங்களையும் இந்த தளம் வழங்குகிறது.
கருவுற்றிருந்தபோது அரிதான கல்லீரல் பிரச்சனையை சாக்ஷி சப்ரா எதிர்கொண்டுள்ளார். அதன் பின்னரே ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட தாவர உணவு முறைக்கு மாறினார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை சீராகவே அந்த முறையைக் கொண்டு தற்போதைய உணவு விநியோக தொழிலைத் தொடங்கி வெற்றி கண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |