இலங்கை ஜாம்பவான் மலிங்காவின் சாதனையை முறியடித்த KKR வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன், இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
17வது ஐபிஎல் சீசன் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது. நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் நிர்ணயித்த 154 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 17வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நரைன் சாதனை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் மலிங்காவின் சாதனை ஒன்றை முறியடித்தார்.
லசித் மலிங்கா (இலங்கை) ஒரு மைதானத்தில் (வான்கடே) அதிக விக்கெட்டுகள் (68) வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்னகத்தே வைத்திருந்தார்.
அதனை ஈடன் கார்டன் மைதானத்தில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சுனில் நரைன் (மேற்கிந்திய தீவுகள்) முறியடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |