சுனில் நரைனின் சுழலில் ஹோல்டரின் செயின்ட் கிட்ஸ் படுதோல்வி
கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணியை வீழ்த்தியது.
ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில், DLS முறையில் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணியை வீழ்த்தியது.
சுனில் நரைனின் மாயாஜால சுழல்
செயின்ட் வின்சென்ட்டில் நடந்த கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியோட்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
21 DOT BALLS IN 4 OVERS BY SUNIL NARINE IN CPL 2026 🥶
— Cric Global (@CricGlobal000) August 9, 2026
- The Greatest in T20 History. pic.twitter.com/P0fXT2dEPH
முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி, தொடக்கத்தில் சுனில் நரைனின் மாயாஜால சுழலில் விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் டெர்ரன்ஸ் ஹின்ட்ஸ் மற்றும் டொமினிக் ட்ராக்ஸின் புயல்வேகத்தில் விக்கெட்டுகள் சரிய, செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியோட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ஓட்டங்களே எடுத்தது.
அதிகபட்சமாக கெவின் விக்காம் 38 ஓட்டங்களும், ஜோன்சன் சார்லஸ் 21 ஓட்டங்களும், நெட் 18 ஓட்டங்களும் எடுத்தனர். சுனில் நரைன் (Sunil Narine), ஹின்ட்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ட்ராக்ஸ் 2 விக்கெட்டுகளும், கூலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ட்ரின்பாகோ வெற்றி
அடுத்து களமிறங்கிய ட்ரின்பாகோ அணியில் ஹால்ஸ் 9 ஓட்டங்களிலும், முன்ரோ 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஜோஷுவா 18 ஓட்டங்களில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
மேத்யூ பிரீட்ஸ்கி (Matthew Breetzke) ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுக்க, ட்ரின்பாகோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்தது.
இதன்மூலம் DLS முறையில் ட்ரின்பாகோ நைட்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சுனில் நரைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |