டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை செய்த நரைன்
சுனில் நரைன் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்தார்.
சுனில் நரைன் கிளீன் போல்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
மழை காரணமாக 16 ஓட்டங்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.
You miss, I hit ?⚡️
— IndianPremierLeague (@IPL) May 11, 2024
A rare golden duck in Kolkata for Sunil Narine! ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #KKRvMI pic.twitter.com/0DQsKdXDhD
பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே சுனில் நரைன் (Sunil Narine) கிளீன் போல்டு ஆனார். இதன்மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன் அலெக்ஸ் ஹால்ஸ் 43 முறை டக்அவுட் ஆகியிருந்தார். ஆனால் சுனில் நரைன் 44வது முறையாக டக்அவுட் ஆகி முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.
அதிகமுறை டி20யில் டக்அவுட் ஆன வீரர்கள்:
- சுனில் நரைன் (44)
- அலெக்ஸ் ஹால்ஸ் (43)
- ரஷீத் கான் (42)
- பால் ஸ்டிர்லிங் (32)
- கிளென் மேக்ஸ்வெல் (31)
- ஜேசன் ராய் (31)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |