உலகக்கிண்ண தொடரில் விளையாட மாட்டேன்! அணி வீரர்கள் கேட்டும் மறுக்கும் மிரட்டல் வீரர்
மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் சுனில் நரைன் டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சுனில் நரைன்
அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக்கிண்ண தொடர் சூன் 2ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது.
இதற்கான மேற்கிந்திய தீவுகளில் விளையாட சுனில் நரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் மறுத்து வருகிறார்.
2019ஆம் ஆண்டில் தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய சுனில் நரைன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.
உலகக்கோப்பைக்கு மறுப்பு
எனினும் ஐபிஎல் உள்ளிட்ட போட்டித் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் சதம் விளாசி சாதனை படைத்த சுனில் நரைன் மிரட்டலான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சுனில் நரைன் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து கூறுகையில், ''சமீபத்தில் எனது செயல்பாடுகள் பலரைப் பகிரங்கமாகத் தூண்டி, நான் ஓய்வில் இருந்து வெளியேறி, வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன், தாழ்மையுடன் இருக்கிறேன்.
நான் அந்த முடிவில் சமாதானம் செய்துவிட்டேன், நான் ஒருபோதும் ஏமாற்றமடைய விரும்பவில்லை, அந்த கதவு இப்போது மூடப்பட்டுள்ளது. மேலும் சூன் மாதத்தில் மேற்கிந்திய தீவுகளுக்காக களமிறங்கும் தோழர்களுக்கு நான் ஆதரவளிப்பேன்.
கடந்த சில மாதங்களாக கடினமாக உழைத்த தோழர்களே, எங்கள் அற்புதமான ரசிகர்களுக்கு அவர்கள் மற்றொரு பட்டத்தை வெல்லும் திறன் கொண்டவர்கள் என்பதைக் காட்டத் தகுதியானவர்கள். உங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |