கே.எல்.ராகுல் திருமணம்! பரிசுத்தொகை எவ்வளவு கோடி தெரியுமா?
பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகை அதியா ஷெட்டி திருமணம் திங்கள்கிழமை மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
கே.எல்.ராகுல் திருமணம்
அதியாவும், ராகுலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் இருவரும் தங்களது காதலை முறைப்படி வெளியுலகத்துக்கு அறிவித்தனர்.
மும்பையிலிருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் கண்டாலா பகுதியில் உள்ள அதியாவின் தந்தை சுனீல் ஷெட்டிக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அதியா - கே.எல். ராகுல் திருமண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
வரதட்சணை
சுனில் ஷெட்டி தன் மருமகனுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை வரதட்சணையாகக் கொடுத்திருக்கிறார். இந்த வீடு மும்பையில் இருக்கிறது.
பரிசு
- நடிகர் சல்மான் கான் மணப்பெண்ணுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான ஆடிக்காரை பரிசாக வழங்கி இருக்கிறார்.
- நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆடம்பர வாட்ச் ஒன்றை அதியா ஷெட்டிக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.
- நடிகர் அர்ஜூன் கபூர் ரூ.1.5 கோடி மதிப்பிலான வைர பிரேஸ்லெட் ஒன்றை அதியாவுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
- கிரிக்கெட் வீரர் விராட் கோலி கே.எல்.ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
- கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி மணமகனுக்கு ரூ. 80 லட்சம் மதிப்பிலான ஆடம்பர பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.