விண்வெளி மையத்தில் தன் குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வெளியான வீடியோ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
பூமிக்கு அழைத்து வரும் திட்டம்
ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார்.
அவர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.
ஆனால், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
To everyone on Earth, Merry Christmas from our @NASA_Astronauts aboard the International @Space_Station. pic.twitter.com/GoOZjXJYLP
— NASA (@NASA) December 23, 2024
கிறிஸ்துமஸ் வாழ்த்து
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது குழுவுடன் இணைந்து விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், "சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வரவேற்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் 7 பேர் இங்கே இருக்கிறோம், எனவே நாங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம்" என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |