விண்வெளியில் செல்ஃபி எடுத்த சுனிதா வில்லியம்ஸ்! அற்புதம் என வியக்கும் நாசா
இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நடைப்பயணத்தின்போது ஒரு அற்புதமான செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ்
கடந்த சூன் 2024ஆம் ஆண்டு விண்வெளி பயணம் மோசமாக மாறிய பிறகு, சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் சிக்கித் தவிக்கிறார்.
எனினும் அவர் தான் நலமுடன் பூமிக்கு திரும்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பூமிக்கு 423 கிலோமீற்றர் உயரத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடை செல்ஃபி ஒன்றை எடுத்தார்.
ஆச்சரியத்தில் நாசா
அதனை "அற்புதமான செல்ஃபி" என குறிப்பிட்டுள்ள நாசா, உலகெங்கிலும் உள்ள அனைத்து விண்வெளி ஆர்வலர்களையும் இது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் செல்ஃபி அவருக்கு ஒரு சாதனையாகவும், விண்வெளியில் மனித ஆய்வின் வெளிப்பாடாகவும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் அவரின் சாதனை படைத்த விண்வெளி நடைப்பயணங்களும், ISSயில் ஆராய்ச்சிக்கான அவரது தொடர்ச்சியான பங்களிப்பும் உலகை ஊக்குவின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |