சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பணி., புதிய விண்கலத்தை ஏவிய NASA-SpaceX
விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை மீட்கும் The Crew-9 mission விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஜூன் மாதம், போயிங்கின் ஸ்டார்லைனர் ஒரு விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது.
அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் அங்கேயே தங்கி விட்டனர்.
காரணமே இல்லாமல் பல நாட்களாக அவர்கள் விண்வெளியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை நாசா (NASA) மேற்கொண்டுள்ளது.
செப்டம்பர் 28-ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.17 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 10.47 மணி) The Crew-9 mission விண்கலம் ஏவப்பட்டது.
நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் மிஷன் நிபுணர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் குழு இப்பணியின் தளபதிகளாக உள்ளனர்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இந்த விண்கலம் 29-ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு (இலங்கை நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 3 மணி) சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டாக் செய்யப்படும்.
SpaceX Crew டிராகன் காப்ஸ்யூல்கள் வழக்கமாக நான்கு விண்வெளி வீரர்களைசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்கின்றன.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் திரும்பி வருவதற்காக இரண்டு இருக்கைகள் காலியாக வைக்கப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rescue Mission To Bring Home Sunita Williams, Sunita Williams Rescue Mission, NASA-SpaceX, crew 9 mission, Barry Wilmore