கொலை மிரட்டல்களையும், அவமானங்களையும் சந்தித்தேன்: கேன்ஸ் திரைப்பட விழாவில் சன்னி லியோன்
பிரபல இந்திய நடிகையான சன்னி லியோன் கேன்ஸ் திரைப்பட விழாவில், கலந்து கொண்ட போது தனக்கு நடந்த அநீதிகளை பற்றி பகிர்ந்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழா
உலக அளவில் மிக பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸில் நடைபெற்றுள்ளது. இந்த திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் உட்பட, பல இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
@instagram
இதில் இந்தியாவின் சிறந்த இயக்குநராக கருதப்படும் அனுராக் காஷ்யப்பின், இயக்கிய கென்னடி திரைப்படம் பிரிமியர் காட்சிக்காக திரையிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன், ராகுல் பட், இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த விழாவிற்கு சன்னி லியோன் விசித்திரமான உடையில் வந்துள்ளார்.
மனம் திறந்த சன்னி லியோன்
இந்த விழாவில் அனுராக் காஷ்யப்பின் கென்னடி படம் திரையிடப்பட்ட பின்பு பேசிய சன்னி லியோன், ‘இது என் கேரியரில் மிகவும் அற்புதமான தருணங்களில் ஒன்றாகும்’ என கூறியுள்ளார்.
@getty images
மேலும் ஆபாச பட துறையிலிருந்து விட்டு சினிமாவிற்குள் நுழையும் போது, பலர் அவரை அவமானப்படுத்தியாகவும், ஆனால் தான் மனமுடையாமல் முன்னேறி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல மர்ம நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் கூட வந்திருக்கிறதெனவும், அதற்கெல்லாம் அஞ்சாமல் திரைத்துறையில் நடிக்கிறேன் என மிக உருக்கமாக பேசியுள்ளார்.
@youtube
சன்னி லியோன் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள கென்னடி திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.