பண மழையில் புரளும் சன்னி லியோன்: இவர் நடிக்கும் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?
அன்றைய காலத்தில் சில்க் ஸ்மிதா மாதிரி இன்றைய நாளில் அனைவருக்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் சன்னி லியோன் தான்.
தற்போதைய இளம் சமூகத்தினரை கவர்ந்து வரும் நடிகை சன்னி லியோனின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சன்னி லியோன்
ஹாலிவுட்,பாலிவுட்,டோலிவுட் என இந்தியா மற்றும் அல்ல உலக ரீதியும் பிரபலமாக இருப்பவர் தான் சன்னி லியோன். இவர் ஒரு சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் மட்டுமல்லாமல் குடும்பத்துடன் கனடாவில் வாழ்ந்த வந்துள்ளார்.
இவர் திருமணம் செய்து தனது மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெண் குழந்தை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி, வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.
இவரது இளமை காலமானது போன் இண்டஸ்ட்ரியில் ஆரம்பமாகியது. பின் அதில் இருந்து முற்றிலும் வெளிவந்து கணவருடன் இந்தியாவுக்கு வந்து சன்னி லியோன் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார்.
ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ்-2 போன்ற பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியதையடுத்து இவருக்கு அடுத்தடும் திரைப்பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் சன்னி லியோனுக்கு வாய்ப்புகள் வர தொடங்கியது.
தமிழில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்த சன்னி லியோனுக்கு தமிழக ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி இருகின்றது.
சொத்து மதிப்பு
இவருடைய சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டி இருக்கிறது. இவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் சொந்தமாக பிரம்மாண்ட பங்களாவும், மும்பையில் சொந்தமாக வீடும் இருகின்றது.
மேலும் சன் சிட்டி மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தன் கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |