நூலிழையில் வெற்றியை கோட்டைவிட்ட பொல்லார்டு! தட்டித் தூக்கிய மார்க்ரமின் படை
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் மார்க்ரமின் சன்ரைசர்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் MI கேப்டவுன் அணியை வீழ்த்தியது.
அபேல் - மார்க்ரம் கூட்டணி
SA20 தொடரின் 20வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் MI கேப்டவுன் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் ஹெர்மன் 2 ஓட்டங்களிலும், மலான் 18 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அடுத்து கைகோர்த்த அபேல் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஜோடி MI அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. அரைசதம் விளாசிய அபேல் 44 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
@SunrisersEC
அதன் பின்னர் மார்க்ரம் 54 (32) ஓட்டங்கள் விளாச, ஸ்டப்ஸ் 13 பந்துகளில் 23 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 175 ஓட்டங்கள் குவித்தது. துஷாரா மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளும், பொல்லார்டு, தாமஸ் கபேர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
176 is the magic number for the second innings. Onto the batters now 💪#OneFamily #MICapeTown #SECvMICT #SA20 pic.twitter.com/HsEVmTdaIw
— MI Cape Town (@MICapeTown) January 27, 2024
கடைசி வரை போராடிய பொல்லார்டு
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய MI அணியில் ஒவ்வொரு வீரரும் அதிரடியாக விளையாடி 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தனர்.
Scenes after an unbelievABELL runout 🫸🫷 pic.twitter.com/pd0G33W9r2
— Sunrisers Eastern Cape (@SunrisersEC) January 27, 2024
கடைசி ஓவர் வரை நின்ற பொல்லார்டு வெற்றிக்காக போராடினார். 2 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 30 ஓட்டங்கள் எடுத்திருந்த பொல்லார்டு ரன் அவுட் ஆனார்.
அடுத்து கபேர் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, சன்ரைசர்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
@SunrisersEC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |