ஜன்செனின் மிரட்டலில் மண்ணை கவ்விய பாப் டூ பிளெஸ்ஸிஸ் அணி! தட்டித் தூக்கிய மார்க்ரம் படை
SA20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் அணியை வீழ்த்தியது.
செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் 165 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் மார்க்ரம் 43 ஓட்டங்கள் விளாசினார். பெடிங்கம் 37 ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 35 ஓட்டங்களும், அபெல் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஜோபர்க் அணியில் கான்வே, பாப் டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி 34 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் டூ பிளெஸ்ஸிஸ் 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜன்சென் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அடுத்து ப்ளூய் 19 ஓட்டங்களில் வெளியேற, கான்வே 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அதிரடி வீரர் பேர்ஸ்டோவை 14 ஓட்டங்களில் ஜன்சென் வெளியேற்றினர்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பியதால் ஜோபர்க் அணி 8 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்களே எடுத்தது.
மார்கோ ஜன்சென் 19 ஓட்டங்களே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Sunrisers Eastern Cape defeated Joburg Super Kings by 14 runs to register their fourth consecutive win in SA20 2025. 🏆
— Sportskeeda (@Sportskeeda) January 25, 2025
Marco Jansen was named Player of the Match for his all-round performance. ⭐#Cricket #SA20 #MarcoJansen pic.twitter.com/oiwyq6DKGk
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |